Wednesday, 17 April 2013

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி


அமெரிக்காவில், சர்வதேச வீரர்கள் பங்கேற்ற மராத்தான் போட்டி, பாஸ்டன் நகரில் நடைபெற்றது.இந்நிலையில் போட்டியின் போது அதன் அருகே அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதனால் பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தொடர் வெடிகுண்டு இக்குதலில் 3 பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.



சீனாவில் பறவை காய்ச்சலுக்கு 16 பேர் பலி


Print E-mail
புதன்கிழமை, 17, ஏப்ரல் 2013 (17:41 IST)

சீன நாட்டில் பறவை காய்ச்சலுக்கு இப்போது 16 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எத்தனை பேரை பறவை காய்ச்சல் தாக்கி இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரம் தெரிய வில்லை. பறவை காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளவர்கள் கோழிப்பண்ணைக்கு தொடர்பு இல்லாதவர்கள்.

பாதிப்புக்குள்ளான மனிதர்களை இந்த வைரஸ் எப்படி தாக்குகிறது என்பது மர்மமாக உள்ளதாக சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை விஞ்ஞானி ஜெங் குவாங் தெரிவித்தார்.
 

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம்


புதன்கிழமை, 17, ஏப்ரல் 2013 (15:35 IST)



ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

ஜப்பானிக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.மியாகி தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Don't drink too much coca-cola..

குமாஸ்தா கொலை: சஞ்சிவீராயர் கோயில் தெருவில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!


குமாஸ்தா கொலை: சஞ்சிவீராயர் கோயில் தெருவில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!

மின்னஞ்சல்அச்சிடுகPDF


பரங்கிபபேட்டை: பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் குமாஸ்தா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரத்தில் புதைக்கப்பட்ட உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
பரங்கிபபேட்ங்கிடை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக இருந்தார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடலூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரங்கிபபேட்டை அகரம் காலனி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை திரும்ப பெற்றனர்.

இதனையடுத்து நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மாட்டோம், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் மெத்தனம் காட்டுகிறது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அகரம் காலனி மக்கள் நேற்று மாலை 7 மணியளவில் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியில் திரும்பப்பெறப்பட்டது.

Tuesday, 16 April 2013

செவ்வாய், 16 ஏப்ரல், 2013 குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா பின் தங்கியுள்ளது!



புதுடெல்லி:இந்தியாவில் 197 மாவட்டங்கள் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் மிகவும் பின் தங்கியுள்ளதாக ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்(அப்ஸா) அமலில் இருக்கும் 91 மாவட்டங்களிலும், இடதுசாரி தீவிரவாதம் வலுவடைந்துள்ளதாக அரசு கூறும் 106 மாவட்டங்களிலும் போலீசும், பாதுகாப்பு படையினரும் வயதை பார்க்காமல் இளம் வயதினரை கைதுச் செய்து துன்புறுத்தி வருகின்றனர். அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, ஜம்மு-கஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அப்ஸா அமலில் உள்ளது. ஆந்திரபிரதேசம், பீகார், சட்டீஷ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, ஒடீஷா, உ.பி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் வலுவாக வேரூன்றியுள்ளதாக அரசு கூறுகிறது.
ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் குறைந்தது பருவ வயதை அடையாத 15 பேரையாவது என்கவுண்டர் என்ற பெயரில் பாதுகாப்பு ராணுவம் கொலைச் செய்துள்ளது. 21 வழக்குகளில் பருவ வயதை அடையாதவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர் என்று செண்டர் இயக்குநர் ஸுஹாஸ் சக்மா கூறுகிறார். 16 மாநிலங்களில் உள்ள 181 மாவட்டங்களில் பருவ வயதை அடையாதவர்களை தங்கவைக்கும் தனியாக ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. இது ஜுவைனைல் ஜஸ்டிஸ் சட்டத்திற்கு எதிரானதாகும். ஜம்மு கஷ்மீரில் கூட 2 ஜுவைனல் ஹோம் மட்டுமே உள்ளன. பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜுவைனைல் ஆணையம் பொதுவாகவே செயலற்றதாகவே உள்ளது.
ஜார்கண்டில் 3500 வழக்குகள் ஜுவைனல் ஆணையத்தின்  பரிசீலனையில் உள்ளன. பெரும்பாலும் பருவ வயதை அடையாதவர்கள் பாதுகாப்புச் சட்டங்களின் படி கைதுச் செய்யப்படுகின்றனர். ஜம்மு-கஷ்மீரில் போலீஸ் மீது கல்வீசியதால் 14 வயதான ஃபைஸல் ரஃபீக் ஹக்கீம் முன்னெச்சரிக்கை காவல் சட்டத்தின்படி கைதுச் செய்யப்பட்டுள்ளான். மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து உமர் அப்துல்லாஹ் அரசு ஹக்கீமை பல மாதங்கள் கழித்து விடுதலைச் செய்தது. அஸ்ஸாமில் 13 வயதான ரகால் கவுரை போலி என்கவுண்டரில் சி.ஆர்.பி.எஃப் படையினர் கொலைச் செய்ததாக ஏசியன் செண்டரின் அறிக்கை கூறுகிறது. பின்னர் அஸ்ஸாம் மாநில மனித உரிமை கமிஷன் இவ்விவகாரத்தில் தலையிட்டதன் விளைவாக அரசு கவுரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
ஆனால்,சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆந்திர பிரதேச மாநிலம் வாரங்கலில் 14 வயதான புத்தி சுவாதீனம் இல்லாத சிறுமியை சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திலும் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்தப்படவில்லை. பொதுவாகவே மாநில அரசுகள் ஜுவைனல் ஜஸ்டிஸ் சட்டத்தை அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாக ஏசியன் செண்டரின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013 ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..வட இந்தியா, வளைகுடா நாடுகளும் குலுங்கின

துபாய் :ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின
இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8
புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
துபாய், ஷார்ஜா, அபுதாபி அஜ்மான்...இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. . அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர்.அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து த‌ங்க‌ள‌து இருப்பிட‌ங்க‌ளுக்கு திரும்பின‌ர்.அதே போல சவூதி யில்  ஜூபைல்  தமாம் மற்றும் பஹ்ரைனிலும் கத்தாரிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்துஉயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடின